search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலக்கரி சுரங்கம்"

    சீனாவின் புஜியான் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.#ChinaCoalmineAccident
    பெய்ஜிங்:

    சீனாவின் புஜியான் மாநிலம் யாங்டாங் மாவட்டத்தில் உள்ள லோங்யான் பகுதியில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் நேற்று 9 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் அங்கு பணிபுரிந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

    இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்த ஒருவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். மண் குவியலில் சிக்கியுள்ள மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பாக சுரங்க உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #ChinaCoalmineAccident
    மேகாலயா மாநிலத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை இந்திய கடற்படை இன்று அனுப்பி வைத்துள்ளது. #Meghalayacoalmine #NavyDivers
    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.

    சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, இந்த சுரங்க நிர்வாகம் வேறு மாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துவது வழக்கம். தற்போது, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிகிறது.

    தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

    கடந்த 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

    சுரங்கத்துக்குள் வெள்ள நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 30 அடி வரை மட்டுமே நீருக்குள் இறங்க முடியும். எனவே, அந்த அளவுக்கு நீரை வெளியேற்ற முயன்றபோது, குறைந்த சக்தி கொண்ட மோட்டார்களால் தண்ணீரை வேகமாக வெளியேற்ற முடியவில்லை. அத்துடன், மழையும் பெய்ததால் கடந்த திங்கட்கிழமை மீட்புப்பணி நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து,  நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார்கள் சாலைமார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை சம்பவ இடத்துக்கு வந்து சேர இன்னும் 3 அல்லது 4 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றுடன் 15 நாட்கள் ஆனநிலையில், மீட்புப்பணி இன்னும் தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

    இந்நிலையில், மேகாலயா நிலக்கரி சுரங்கத்தின் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை இந்திய கடற்படை இன்று அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Meghalayacoalmine #NavyDivers
    மேகாலய நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. #MeghalayaCoalmine
    லம்தாரி:

    மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கம் ஒன்றில், அருகில் உள்ள லைடெயின் ஆற்றில் இருந்து தண்ணீர் புகுந்தது. 370 அடி ஆழ சுரங்கத்தில் சுமார் 70 அடிக்கு தண்ணீர் நிறைந்துள்ளது. நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் புகுந்ததும் 5 தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேறினர். ஆனால் மேலும் 13 பேர் அங்கு சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் காலையில் தகவல் வெளியானது.



    இதைத்தொடர்ந்து போலீசாரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் கதி என்ன? என்று இதுவரை தெரியவில்லை. அவர்களை உயிருடன் மீட்பதற்காக மீட்புக்குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். #MeghalayaCoalmine

    உலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர ஓட்டல் இயங்க தொடங்கியுள்ளது. #Worldsfirst #undergroundhotel #abandonedquarry #underground
    பீஜிங்:

    உலகம் முழுவதும் பொதுவாக கைவிடப்பட்ட நிலக்கரி மற்றும் தங்கச்சுரங்கங்கள் பின்னர் மண்ணை கொட்டி நிரப்பப்பட்டு, சமன்படுத்தி வேறு வகையில் பயன்படுத்தப்படும்.

    ஆனால், சீனாவின் பிரபல தொழில் நகரமான ஷாங்காய் நகரில் கைவிடப்பட்ட ஒரு சுரங்கத்தை இப்படி செய்வதற்கு பதிலாக ஆடம்பர ஓட்டலாக மாற்ற கடந்த 2013-ம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது. ஷங்காய் நகரின் மத்திய பகுதியில் இருந்து சுமார் ஒருமணி நேர பயண தூரத்தில் தற்போது 17 மாடி கட்டிடமாக ‘இன்ட்டர் கான்ட்டினென்ட்டல் டிரீம்லேன்ட்’ என்ற பெயருடன் இந்த ஓட்டல் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    தரை பகுதியில் இருந்து  பல மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டல் சமீபத்தில் திறப்புவிழா கண்டுள்ளது. சுமார் 30 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் தீம் பார்க்குடன் உருவாகியுள்ள இந்த ஓட்டலில் 336 அறைகள் உள்ளன.

    இங்கு தங்குபவர்கள் மலையேற்றம், நீர்சறுக்கு போன்றவற்றில் ஈடுபடலாம். இதில் ஓரிரவு தங்குவதற்கு குறைந்தபட்ச கட்டணமாக 3 ஆயிரத்து 394 யுவான்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #Worldsfirst #undergroundhotel #abandonedquarry #underground 
    சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. #ChinaCoalMine #CoalMineCollapse
    பீஜிங்:

    சீனாவின் யுன்செங் கவுண்டியில் லாங்யுன் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஷிப்டில் 334 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் வடிகால் சுரங்கத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதும் சுரங்கத்தினுள் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

    சுரங்கம் இடிந்து விழுந்த பகுதியில் 22 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்புக்குழுவைச் சேர்ந்த 170 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதில் 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். பலத்த காயமடைந்திருந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 18 பேரை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. அவர்களின் நிலை என்ன? என்பதும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்கு சீனாவில் ஏற்பட்ட சுரங்க வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #ChinaCoalMine #CoalMineCollapse 
    ×